ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகை ஜோதிகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு 36 வயதினிலே படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கினார். தொடர்ந்து தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தவர், சமீப காலமாக மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் ; தி கோர் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜோதிகா. கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் படம் இது. 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் மம்முட்டியும் ஜோதிகாவும் ஒருவரை ஒருவர் சீரியஸாக பார்த்தபடி அமர்ந்திருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. காதல் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.