'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்த காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் அதிகம் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் மட்டும் முக்கியமான படங்களில், குறிப்பாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்குகின்ற படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்றும் மலையாள நடிகர் திலீப் நடிக்க உள்ள அவரது 148 வது படத்தில் தான் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல போட்டோகிராபர் ஷாலு என்பவர் தெரியப்படுத்தி உள்ளதுடன், திலீப் 148 வது படத்திற்கான கிளாப் போர்டை வைத்து ஒரு பெண்மணி தனது முகத்தை மறைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, சிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.