நாகசைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலாவின் சகோதரி பெயரும் சமந்தாவாமே | சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி | 'லவ் டுடே' பாணியில் உருவாகும் 'ரிங் ரிங்' | ''மனைவியின் பேச்சை கேளுங்க'': கணவன்மார்களுக்கு அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன் | விமல் ஜோடியாக மீண்டும் நடிக்கும் சாயாதேவி | நடிப்புக்கு முழுக்கா?: நடிகர் விக்ராந்த் மாஸே திடீர் 'பல்டி' | 'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது |
ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. சினிமாவிற்கு அவர் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்போது தனது 50வது படத்தில் கமிட்டாகி இருக்கிறார் அஞ்சலி. இந்த படத்தை கிரீன் அமியூஸ்மென்ட் மற்றும் டி3 புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏப்ரல் 27 ஆம் தேதியான நாளை மாலை இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.