ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
நடிகர் சசிகுமார் நடித்து கடைசியாக வெளிவந்த அயோத்தி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்து நல்ல கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சசிகுமார். இந்த நிலையில் அவரின் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குனர் கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த படத்தை பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.
சசிகுமார் உடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக நடிகர் நவீன் சந்திரா நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் பட்டாஸ் படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார். ஏற்கனவே பல தெலுங்கு படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை காவல் துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.