நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்று அறிவித்தனர். சினிமா அல்லாமல் விரைவில் அரசியலில் இறங்குகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக தன் ரசிகர்களின் மூலமாக அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களுக்கு அவர்கள் பிறந்தநாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அறிவுறித்தினார்.
இந்நிலையில் அடுத்தப்படியாக மாணவர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கிறார் விஜய் தகவல் வெளியானது. இப்போது வருகின்ற ஜூன் 2ம் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி தொகுதியிலும் 10ம், +2 வகுப்புகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளையும் விஜய் சந்திக்கிறார் என கூறப்படுகிறது. ஜூன் 14ல் இதற்கான நிகழ்வு நடக்கலாம் என கூறப்படுகிறது.