ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கேன்ஸ் திரைப்பட விழா மும்முரமாக நடந்து வருகிறது. அதில் இந்திய நடிகைகள் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் அணிந்து கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பிங்க் கலர் கவுண் அணிந்து காட்சி அளித்ததுடன் அவர் அணிந்திருந்த முதலை வடிவ நெக்லஸ் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் “இந்த லுக்கை பார்த்து நான் குழம்பியிருக்கிறேன். அவர் கார்டியரின் ஒரிஜினல் மரியா பெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்திருக்கிறார்? பிரான்ஸில் இருக்கும் கேன்ஸுக்கு சென்றிருக்கிறீர்கள். அதுதான் கார்டியரின் சொந்த நாடு. வரலாற்று சிறப்புமிக்க நகையின் போலியை அணிவது. வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் ஸ்பெஷலான பொக்கிஷங்கள், நகைகள் இருக்கிறது. அதை அவர் அணிந்திருக்கலாம். என்றார்.
இதுகுறித்து ஊர்வசி ரவுத்தேலா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த ஒரிஜினல் முதலை நெக்லஸின் விலை 200 கோடியில் இருந்து 276 கோடியாக உயர்ந்துவிட்டது. அவர் நிஜமான நகையே அணிந்திருந்தார். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.