குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு மாசிலாமணி, வம்சம், லத்தி உட்பட பல படங்களில் நடித்தார். தற்போது ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. டொமின் டி சில்வா என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தின் புரமோஷனுக்காக சுனைனாவை காணவில்லை என்று அந்த படக்குழு ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.
சுனைனாவின் இணையப் பக்கத்திலும் எந்த பதிவுகளும் வெளியாகவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பரபரப்பை ஏற்படுத்தியதால், உண்மையிலேயே சுனைனாவுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதட்டத்துடன் கேள்விகளை எழுப்பி வந்தார்கள். ஆனால் தற்போது ரெஜினா பட குழுவினர்தான் படத்தின் புரமோசனுக்காக இப்படி ஒரு வீடியோவை திட்டமிட்டே வெளியிட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரும் படத்தின் புரமோஷனுக்காக இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் மேற்படி படக் குழுவை எச்சரித்துள்ளார்களாம்.