இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ஒரு சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்துடன் தனது சிகிச்சைக்காக பெங்களூருக்கு சென்றபோது இவர்களது கார் தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி அவரது தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் இந்த விபத்து நடந்தாலும் நேற்று முன்தினம் தான் அவரது தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஷைன் டாம் சாக்கோவும் அவரது தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'தி புரொடக்டர்' என்கிற படம் வரும் ஜூன் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் ஜி.எம் மனு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதற்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இப்படி திடீரென ஜூன் 13ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை தருகிறது.
குறிப்பாக ஷைன் டாம் சாக்கோ வீட்டில் நடைபெற்றுள்ள துக்க நிகழ்வு கடந்த சில நாட்களாகவே கேரளாவில் அனைவரிடமும் கவனம் பெற்றுள்ளதால் இதை ஒரு பப்ளிசிட்டியாக பயன்படுத்தி இந்த படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள் என்றே சொல்லப்படுகிறது. இப்படி ஒரு நடிகர் துக்கத்தில் இருக்கும்போது அதை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தலாமா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.