பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
தமிழில் இது தான் எனக்கு முதல் என்ட்ரி... இனி தமிழ் ரசிகர்களை எல்லாம் என் 'கஸ்டடியி'ல் எடுக்குறேன் என திரையில் திருவிழாவாக களமிறங்கி சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டு கலக்கும் நடிகர் நாகசைதன்யா பேசுகிறார்...
'கஸ்டடி படம்' மூலம் தமிழுக்கு வரீங்க போல
பிறந்து வளர்ந்தது சென்னை தான். தமிழ் மக்கள் எப்படி சினிமாவை நேசிப்பாங்கனு எனக்கு தெரியும். இருந்தாலும் சந்தோஷமாக, பதட்டமாக தான் இருக்கு. தமிழ் மக்கள் எப்படி என்னை ஏற்றுக்கொள்ள போறாங்கனு மனசுல ஓடுது. 'கஸ்டடி' மூலம் தமிழில் என்ட்ரி ஆகியிருக்கேன்.
அறிமுகமான முதல் படம் ஜோஷ் குறித்து
ஆரம்பத்தில் அப்பா, மாமா கதை கேட்க கொஞ்சம் உதவி செய்தார்கள். பிறகு குறை, நிறை, வெற்றி, தோல்வி இருந்தாலும் நீ தான் பார்த்துகணும்னு சொல்லிட்டாங்க. பிறகு என் கதைகளை தேர்ந்தெடுத்து நடிச்சேன்
தமிழ் படங்கள் நடிக்க தாமதம் ஏன்
ரசிகர்களுக்கு மொழி தேவையில்லை. நல்ல கதையில் நடிக்கிறவங்க யார்னு பார்ப்பதில்லை. இது தான் நான் தமிழுக்கு வர தாமதமானது. எதிர்பார்த்தபடி வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' வந்தது.
கஸ்டடி படத்தில் 'கான்ஸ்டபிள்'
இது புதுசா இருந்தது. இந்த கேரக்டர் பக்கத்து வீட்ல இருக்குற கான்ஸ்டபிள் மாதிரி இருக்கும். தியேட்டரில் படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களுக்கு என் கேரக்டர் மனசில நிற்கும்.
இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இசை
படத்திற்கு இரண்டு பேரும் இசையமைத்தது சந்தோஷம். அரவிந்தசாமி, சரத்குமார் கூட சப்போர்ட் பண்ணுனாங்க.
வெங்கட் பிரபுவின் படப்பிடிப்பு தளம்
எந்த அளவுக்கு வேலை நடக்குதோ அந்த அளவுக்கு ஜாலி பண்ணுவாங்க. படப்பிடிப்புக்கு போறதுக்கு முன் ஒரு ஸ்கிரிப்ட் புக் எனக்கு கொடுத்துட்டாங்க. எல்லாம் தயாராக போனது ரொம்ப ஈஸியாக இருந்தது.
இது கிரித்திஷெட்டி கூட 2வது படமா
ரொம்ப அருமையான நடிகை. எனக்கு பெரிய சப்போர்ட்டா இருந்திருக்காங்க