'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! |

முன்னணி நடிகையான தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛மாரி' தொடரில் முத்து பேச்சி என்ற கதாபாத்திரத்தில் கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார். மாரி சீரியலில் நடிக்கும் அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 'கோலங்கள் சீரியலில் பணிபுரிந்தவர் தான் மாரி சீரியலின் இயக்குநர். கதை சொல்லும்போதே நான் வியந்துவிட்டேன். அதிலும் முத்து பேச்சி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக்கொண்டேன். முத்து பேச்சி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மேலும் உந்துகோலாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.