175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ‛சலார்'. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். கொரோனா பிரச்னையால் இந்த படம் மூன்று ஆண்டுகளாக தயாராகி வருகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி வரும் இந்தப்படம் வரும் செப்., 28ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
ஆனால் திட்டமிட்டப்படி படம் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள படக்குழு, ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என குறிப்பிட்டு மீண்டும் அதே ரிலீஸ் தேதியை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.