படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
1990களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் சரிவடைந்ததை அடுத்து பருத்திவீரன் படத்தில், கார்த்தியின் சித்தப்பாவாக க நடித்து கேரக்டர் நடிகராக வலம் வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் சரவணன். இந்நிலையில் நடிகர் சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ என்பவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்திருக்கிறார்.
அதையடுத்து மீடியாக்களை சந்தித்த அவர், தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டில் இருந்து தன்னை சரவணன் வெளியேறச் சொல்வதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு என்னை காதலித்து திருமணம் செய்த சரவணனை பருத்திவீரன் படத்துக்கு முன்பு வரை நான் தான் சம்பாதித்து பார்த்துக் கொண்டேன். இப்போது எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. நான் சம்பாதித்து அவர் பெயரிலேயே வாங்கினேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இப்போது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் சரவணன்தான் காரணம் என்று சூர்யா ஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.