'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் | சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன் | சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய தமன் குமார் | தலை பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன் | கமலும் அர்ஜுனும் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா ? துல்கர் பட இயக்குனர் கிண்டல் | மின்னல் முரளி இயக்குனருடன் ஜீத்து ஜோசப்பின் புதிய படம் அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமும் ஐஸ்வர்யாராயும் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார்கள். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரமும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்தனர். இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கமலஹாசன் நடிக்கும் 234 வது படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியிருக்கும் மனிரத்னம், இந்த படத்தை இயக்கி முடித்ததும் விக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.