கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது |
ரோகின் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் 'தீராக் காதல்'. முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவதா நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். படத்தின் தலைப்பை போல் இது தீராக் காதலாக தான் கதை நகரும் என டிரைலரை பார்க்கும்போதே புரிகிறது. மனைவி, குழந்தைகளுடன் வாழும் ஜெய் தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யாவை சந்திக்கிறார். அதன்பின் இவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் ஜெய் நடித்துள்ளார்.