பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
காமெடி நடிகர் போண்டாமணி கடந்த ஆண்டு தனது சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் உதவி செய்தார்கள். தற்போது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் போண்டாமணியின் மகள் சாய் குமாரி பிளஸ் டூ தேர்வில் 600க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதை அடுத்து போண்டா மணியின் சூழ்நிலையை அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அவரது மகள் சாய் குமாரியின் மேல் படிப்புக்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தவர், தன்னுடைய வேல்ஸ் கல்லூரியில் அவர் படிப்பதற்கு பிசிஏ சீட் கொடுத்துள்ளார். இதற்கு நடிகர் போண்டாமணி அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.