லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
கடந்த ஆண்டு ஐரோப்பா நாடுகளுக்கு சென்று சுற்றுப் பயணம் செய்த அஜித் குமார் சமீபத்தில் பூடான், நேபாளம் போன்ற நாடுகளில் பைக் ரைடு சென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த உலக சுற்று பயணத்தை அவர் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிரமான வானிலையை எதிர்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ளார். நேபாளம், பூடான் நாட்டையும் கடந்து சென்றார். அவரது உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார். அதனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்திற்குள் அஜித்குமார் முடித்து விடுவார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.