நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' | படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் |

முள்ளும் மலரும் என்ற டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷாலினி. இவர் சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து உள்ளார். ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவர் ரியாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில் ஷாலினிக்கு தற்போது விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதையடுத்து அதை போடோ சூட் நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛குரல் அற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. மோசமான திருமணத்தை விட்டு விடுவது பரவாயில்லை. காரணம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள். உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்காகவும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் தேவையான மாற்றங்களை செய்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வி அல்ல. உங்களுக்கு வாழ்க்கையில் நேர்மையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்பு முனை. இந்த திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு பெரிய அளவில் தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். என்னைப் போன்ற துணிச்சலான பெண்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்'' என்று பதிவிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை ஷாலினி.




