'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'சித்தி 2', 'தமிழும் சரஸ்வதியும்' ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷனா. அதிலும், தமிழும் சரஸ்வதியும் தொடரில் ஹீரோயின் நக்ஷத்திராவை காட்டிலும் தர்ஷனாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். ஆனால், தர்ஷனா தமிழும் சரஸ்வதியும் தொடரைவிட்டு விலகுவதாக திடீரென செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ரசிகர்கள் குழப்பமடைந்திருந்த நிலையில், தர்ஷனாவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தன் மீது அன்பை கொட்டும் ரசிகர்கள், வசுந்தராவாக பயணித்த தனது அனுபவம், தமிழும் சரஸ்வதியும் சீரியல் குழுவினர், நண்பர்கள் என அனைத்தையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு 'குட் பை சொல்ல கஷ்டமாயிருக்கு' என கூறி விடைபெற்றுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தர்ஷனாவை சீரியலை விட்டு விலக வேண்டாம் என அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர்.