‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகனான பாவலர் சிவன் (60) உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் இன்று(மே 2) காலமானார்.
இந்தியாவே போற்றும் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது சகோதரர் பாவலர் வரதராஜன். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973ல் மறைந்தார்.
இவரது மகன்களில் ஒருவரான பாவலர் சிவன் (60) எனும் சிவா என்பவர் இளையராஜாவின் இசைக்குழுவில் பயணித்து வந்தார். கிதார் இசைக்கலைஞரான இவர் ஓரிரு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். புதுச்சேரியில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் காலமானார். இவரது மறைவு இளையராஜா குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினா இரங்கல்
இசையமைப்பாளர் தினா வெளியிட்ட இரங்கல் பதிவு : இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்