ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2 .இப்படம் இன்று (ஏப். 28) வெளியாகிறது. முதல் நாள் ஷோவை ரசிகர்களுடன் ஜெயம் ரவி காலை 9 மணிக்கு சென்னை குரோம்பேட்டை திரையரங்கிலும், கார்த்தி காலை 9 மணிக்கு சென்னை காசி தியேட்டரிலும் பார்த்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேப்போன்று விக்ரம், திரிஷா ஆகியோர் சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தை சென்னையில் இன்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்
சென்னை, வடபழனியில் உள்ள தியேட்டரில் பொதுமக்களுடன் சேர்ந்து, விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், துலிபாலா உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை பார்த்தனர். காசி தியேட்டரில் படத்தை பார்வையிட சென்ற கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் தியேட்டரில் உள்ள கண்ணாடி உடைந்து சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியது. உடைந்த கண்ணாடிக்கான செலவை கார்த்தி ஏற்றுக் கொண்டார்.