என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! |
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கட்டா குஸ்தி'. இந்த படத்தில் குஸ்தி வீராங்கனையாக அசத்தியிருந்தார் ஐஸ்வர்ய லட்சுமி. அதேசமயம் இந்தப்படம் கணவன் - மனைவி இடையேயான ஈகோ மோதலையும் அழகாக விவரித்து இருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் 2 பட புரொமோஷன் பணியில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. இந்தபடத்திற்காக பல பேட்டிகளையும் அவர் வழங்கி வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‛‛அதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டாம் பாகம் உருவானால் அதில் எப்போது வேண்டுமானாலும் நான் நடிக்க தயார்'' என்றார் ஐஸ்வர்ய லட்சுமி.