டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் இயக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நேற்று தனது பெற்றோரின் 50ம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு விஜய் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த புகைப்படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இல்லை. விஜய் தனது தந்தையுடன் அரசியல் தொடர்பான விஷயத்தில் அதிருப்தியில் உள்ளார். அதேசமயம் அவரின் தாய் மீது அதிக அன்பு கொண்டு இருப்பதால் அவரை மட்டும் சந்தித்ததாக கூறப்படுகிறது.