பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள் | அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன் | தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? | ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' |

தமிழில் தாம்தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி -2 படத்தில் நடித்து வரும் அவர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்திற்காக பத்து நிமிட நீளமுள்ள பாடல் ஒன்றுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் கம்போசிங் செய்திருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த கங்கனா, தற்போது ஜி.வி.பிரகாஷ் கீ-போர்ட்டில் கம்போஸ் செய்வதை அருகில் அமர்ந்து தான் ரசித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ஜி.வி. பிரகாஷ் ஒரு இசை ரசிகராக கம்போஸ் செய்ததை நான் பார்த்து ரசித்தேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.