அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் ஷாலு ஷம்மு. நடிப்பது குறைவென்றாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர்.
அண்மையில் நட்சத்திர ஓட்டல் பார்ட்டி ஒன்றில் ஆட்டம்போட்டுவிட்டு தனது தோழி வீட்டில் இரவு தங்கி விட்டு காலையில் எழுந்து வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் தனது போனை காணவில்லை என்பதை அறிந்திருக்கிறார். நட்சத்திர ஓட்டல், நண்பர்களிடம் தேடிவிட்டு கடைசியாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் நண்பர்களிடம் விசாரித்து வரும் நிலையில் தற்போது போன் கிடைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.
போனுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "எனது ஐபோன் கிடைத்துவிட்டது. எனது வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் காணாமல் போன ஐபோன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். யார் மீது நான் சந்தேகப்பட்டேனோ அவர்தான் எனது ஐபோனை திருடி உள்ளார். 8 வருட நட்பு வீணாகி விட்டது. யாரை நம்புவது என்று தெரியவில்லை. இனி யாரையும் நம்பமாட்டேன்'' என்று கூறியுள்ளார்.