ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்நிறுவனம் தற்போது 'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்திலும், 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இதில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றும், சில சிறிய தவறுகள் நடைபெற்றுள்ளது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விரைவில் சரி செய்ய சோதனையிட்ட துறையினர் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'புஷ்பா 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.