பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் இந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான 9 மணி சிறப்புக் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பேன் என படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இதுவரை பார்க்கவில்லை என இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் போது அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. படம் ஓடிடியில் வந்த பிறகும், டிவியில் ஒளிபரப்பான பிறகும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரே இப்படி சொல்வதா என பலர் கிண்டலடித்தார்கள்.
பார்த்திபன் இன்று காலை அவருடைய டுவிட்டரில், “இரண்டாம் பகுதி 28ல்..! என்னுடையப் பகுதி மிகுதியோ அல்லது குறைவோ(screen space) யாமறியோம்! Trailer-ஐ காண்கையில் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. வானத்தில் பிறை போல அளவில் குறைவேயாயினும் நிறைய நட்சத்திரங்களுடன் பங்குப் போட்டு வானத்தை அழகாக்கியதில் மகிழ்வே! Max நண்பர்களோடு IMAX-ல் முதல் நாளே பார்க்கிறேன். திரையில் சந்திப்போம் நண்பர்களே !,” என அவருடைய காட்சிகள் குறைந்திருக்கலாம் என்ற குறையோடு பதிவிட்டுள்ளார்.