2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! |

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'ப்ரின்ஸ்' படம் படுதோல்வி அடைந்தாலும் அவருடைய பிசினஸ், இமேஜ், ரசிகர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.
அந்தத் தோல்வியைச் சரிக்கட்டும் விதத்தில் அவருடைய இரண்டு படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் அப்படங்கள் பற்றிய வெளியீட்டு அப்டேட், சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படம் ஆகஸ்ட் 11ம் தேதியும், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படம் இந்த வருட தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளி நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே, நவம்பர் 10ம் தேதி 'அயலான்' படம் வெளியாக வாய்ப்புள்ளது.