ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான தசரா திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் வேதாளம் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவாகி வரும் போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதுமட்டுமல்ல கடந்த வருடம் டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தசரா படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுமன் குமார் என்பவர் இயக்குகிறார். அதுமட்டுமல்ல கன்னடத்தில் கேஜிஎப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் தமிழ் திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளது.