எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் - இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் கூட்டனியில் முண்டாசுபட்டி, ராட்சசன் போன்ற படங்கள் வெளியானது.
தற்போது உருவாகும் இந்த படம் காதல், காமெடி கலந்த பேண்டஸி கதைக்களமாக உருவாக்க உள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இன்று இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு வரும் மே முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.