'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தைப் பார்க்க அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். வெளிநாடுகளில் இதுவரையில் தமிழ்ப் படங்கள் வெளியாகாத சில ஊர்களில் கூட படம் வெளியானது.
அமெரிக்காவில் முதல் பாகத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைவிட இரண்டாம் பாகத்திற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சராசரியாக 25 டாலர் அதற்குக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் தமிழ்ப் படங்கள் வார இறுதி நாட்களில்தான் அதிகக் காட்சிகளுடன் வெளியாகும். 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பொறுத்தவரையில் 1000க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட உள்ளதாம். இதுவரையில் எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டதில்லை என்பது கூடுதல் தகவல்.