4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
நடிகர் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிப்பதை விட தமிழ், தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டும் ரவிதேஜா, விஜய் தேவரகொண்டா, பிரபாஸ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயராம். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜெயராம் விரைவில் ஏப்ரல் 28ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாக ரிலீஸூக்காக தயாராகி வருகிறார்,
இந்த நிலையில் தற்போது தனது மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் ஜெயராம். சித்திரை விஷுவை முன்னிட்டு அவர் சபரிமலை தரிசனத்திற்காக சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் கடந்த செப்டம்பரில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பாக இதேபோன்று நடிகர் ஜெயம் ரவியுடன் அவர் சபரிமலை சென்று வழிபட்டு வந்தார் என்பதால், இந்த முறையும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்காக அவர் சபரிமலை சென்று வந்துள்ளதாகவே தெரிகிறது