மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
விமல், தன்யா ஹோப் ஜோடியாக நடித்துள்ள, 'குலசாமி' படத்தை சரவண சக்தி இயக்கியுள்ளார். இயக்குனரின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் நடித்துள்ளார். இப்படம் ஏப். 21ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில்நடந்தது. இவ்விழாவில் படத்தில் நடித்த நாயகன் விமலும், நாயகி தான்யா ஹோப்பும் பங்கேற்கவில்லை. இதற்கு விழா மேடையிலேயே அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜாங்கிட் பேசுகையில், ''நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் என் கார் டிரைவரிடம் தான் தமிழ் கற்றேன். நடிப்பது சுலபம் என நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. டப்பிங் அதற்கும் மேல் கஷ்டமாக இருந்தது ஆனாலும் கஷ்ட பட்டு பேசியுள்ளேன். என் கதாபாத்திரம் சிறியது தான் ஆனால் சமுகத்திற்கு தேவையான கருத்தை படத்தில் கூறியுள்ளேன்,'' என்றார்.