காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' |
திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகியிருந்த விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி, தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வரும் அவர் நடித்திருக்கும் வெப் தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி'.
இந்த தொடரை ஜீ 5 ஓடிடி தளத்திற்காக சோல் புரொடக்ஷன் சார்பில் பெசை அல்லனா, காம்னா மெனஸ் தயாரிக்கிறார்கள், விஷால் வெங்கட் இயக்குகிறார். அபிராமியுடன் ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவன், ஜான், நம்ரிதா, அபிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சுதர்சன் எம்.குமார் இசை அமைக்கிறார். வருகிற 21ம் தேதி வெளியாகிறது.
கொடைக்கானலில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் ஒரு மாணவி திடீரென காணாமல் போகிறாள். பின்னர் அவள் பிணமாக கண்டுபிடிக்கப்படுகிறாள். அவளை கொன்றது யார்? ஏன் என்பது குறித்து போலீசும், பள்ளி மாணவர்களும் சேர்ந்து கண்டுபிடிப்பது மாதிரியான கதை. இதில் பள்ளி தாளாளராக அபிராமி நடித்துள்ளார். இது ஒரு கொரியன் தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் என்றும் கூறப்படுகிறது.