ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் 'சைத்ரா'. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஜெனித்குமார் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: 24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. இதில் யாஷிகா ஆனந்த் பேயாக நடித்துள்ளார். அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. பேய் படம் என்றாலும் வழக்கமான காட்சிகள் இன்றி புதுமையான முறையில் இதனை படமாக்கி உள்ளதோடு. ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் படம் பேசுகிறது. பேய் இருக்கிறதா? இல்லையா என்ற விவாவத்தையும் முன் வைக்கிறது. என்றார்.