பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் சித்தார்த். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தமிழ் படம் 'அருவம்'. 2019ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படம் வெளியானது. தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்து கிடப்பில் இருந்த 'டக்கர்' வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த மாதம் 26ம் தேதி அன்று திரைக்கு வரும் என்பதை இப்போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்ற இருக்கிறார் சித்தார்த்.




