ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் |
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ராமாயண கதாபாத்திரமான ஹனுமனை பின்னணியாக வைத்து மகேஷ் பாபு இயக்கதில் சூப்பர் ஹீரோ படத்தை 3 பாகங்களாக இயக்க இருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது இதே பாணியின் உருவாகி உள்ள 'ஹனு-மேன்' என்ற படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சனாத்திரி எனும் கற்பனை ராஜ்யத்தில் கதாநாயகன் அனுமனின் சக்திகளை பெற்று, அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான்? என்பதுதான் படத்தின் கதை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகிறது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, கவுரஹரி, அனுப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இதுகுறித்து தயாரிப்பு தரப்பு விடுத்துள்ள செய்திகுறிப்பில், “படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பையும் பெற்றது. அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட அனுமன் சாலிசாவின் சக்தி வாய்ந்த காணொளி, இந்தியா முழுவதும் எதிர்பாராத அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க படக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.