பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி அடுத்த வாரம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த வருடம் முதல் பாகம் வெளிவந்த போது, த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் அவர்களது டுவிட்டர் தளத்தில் அவர்களது கதாபாத்திரப் பெயர்களை மாற்றியிருந்தார்கள். படம் ஓடிய வரை அப்படியேதான் இருந்தது.
அது போலவே இப்போது இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில் நேற்று த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது பெயர்களை நீக்கி கதாபாத்திரப் பெயர்களான குந்தவை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். ஆனால், டுவிட்டர் தளத்தின் புதிய விதிகளின்படி அவர்களது 'ப்ளூ டிக்' நீக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது த்ரிஷா அவரது கதாபாத்திரப் பெயரான 'குந்தவை' என்பதை கைவிட்டுவிட்டு 'த்ரிஷா' என்பதற்கே மாறியுள்ளார். ஜெயம் ரவி இன்னும் மாற்றாமல் இருக்கிறார்.