அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷனை 'சோழர்களின் பயணம்' என இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்துள்ளார்கள். நேற்று கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து டில்லி, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, திருச்சி ஆகிய ஊர்களுக்கும் 'பொன்னியின் செல்வன் 2' படக்குழு பயணமாக உள்ளது.
நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழர்களுக்கு கடும் அதிர்ச்சியை நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்கள் கொடுத்தார்கள். நேற்று த்ரிஷா மேடையேறிய பின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து 'லியோ, லியோ, லியோ' என கூச்சலிட்டார்கள். அது காதில் கேட்காதது போல த்ரிஷா நின்றிருந்தார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அஞ்சனாவும் அது வேறு ஏதோ என சமாளித்தார்.
ஒரு கட்டத்தில் அதற்கு மேற் சமாளிக்க முடியாமல் த்ரிஷா, ''லியோ' பத்தி கேக்கறீங்களா,” சிரித்துக் கொண்டே கேட்டார். “நீங்க கேட்டுட்டே இருக்கீங்க இந்த கேள்வியை…எங்க போனாலும் கேக்கப் போறீங்க…'லியோ'வோட ஷுட்ல இருந்துதான் வரேன். அதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. ஆனா, லோகேஷ் ப்ரோ, உங்க தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க, மத்தது 'லியோ' நிகழ்ச்சில பேசலாம்,” என ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கிடையே பேசினார்.
'பொன்னியின் செல்வன் 2' குழு தமிழகத்தில் எங்கு சொன்றாலும் இப்படி விஜய்யின் 'லியோ' அப்டேட் கேட்டால் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருக்கு 'சங்கடமா' இருக்குமே…?. எப்படி சமாளிக்கப் போகிறார்கள் ?.