அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
நடிகர் ஜீவா, தமிழ் கலை டாட் காம் என்ற செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, கலைஞர்களுக்கு சாதி மதம் இல்லை. ஜிப்ஸி என்ற படத்தில் நடித்த போது இந்தியா முழுவதும் பயணித்தேன். அந்த சமயத்தில் அனைத்து நாட்டுபுற கலைஞர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. என்றாலும் கலைகளுக்கு மொழிகள் இல்லை என்று கூறினார் ஜீவா. மேலும் நான் நடித்த டிஷ்யூம் படத்தில் நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குகிற ஜாதி என்று ஒரு டயலாக் பேசி இருப்பேன்.
அதேபோல்தான் அனைத்து கலைஞர்களும் கைதட்டலுக்கு ஏங்குவார்கள் என்று பேசிய ஜீவா, அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கலைக்கு மொழி இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கலைக்கு மொழிகள் இல்லை. தாரை தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது நம்முடைய தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கிறாரே அதே மாதிரி தான் இதுவும். இதனை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் வளராமல் இருக்கிறோம் என்று கூறினார் நடிகர் ஜீவா.