குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் கல்லூரி தரப்பிற்கு ஆதரவாக பிக்பாஸ் அபிராமி நிலைபாடு எடுத்துள்ளார். இதன்காரணமாக பலதரப்பினரும் அபிராமிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக மருத்துவரும் நடிகையுமான டாக்டர்.ஷர்மிளா அபிராமியின் கருத்தை விமர்சித்திருந்தார். அதேபோல மூத்த நடிகையான குட்டி பத்மினியும், அபிராமி திரைத்துறையில் இருந்ததால் அவரை ஒருவர் தொடும்போது தவறாக எந்த உணர்வையும் தராது. ஆனால், மற்ற பெண்களுக்கு அப்படியில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அபிராமி, சமூக வலைதளத்தில் குட்டி பத்மினி பேசியதை பதிவிட்டு அதற்கு கீழ், 'உலகத்தில் திரையுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்களை போலவே இருக்கமாட்டார்கள். சினிமாவில் இருந்ததால் உங்களை ஒருவர் தொடும்போது எந்த ஒரு உணர்வும் இல்லை என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இன்னொரு விஷயம். உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுனா? நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும். நாங்க பாத்துக்கறோம். நீங்க உங்க ஹெல்த்த பாருங்க' என்று பதிவிட்டுள்ளார். இதில், அபிராமி தன்னை நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் என்றும் குட்டி பத்மினியின் பிறப்பை தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். அபிராமியின் இந்த செயலை உச்சபட்ச ஆணவம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.