மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாவது அதிகரித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், ஜெயமோகன் எழுதிய துணைவன் (விடுதலை), வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவல்கள் படமாகி வருகிறது. இந்த நிலையில் துரை குணா எழுதிய 'ஊரார் வரைந்த ஓவியம்' என்ற நாவல் 'அம்புநாடு ஒம்பது குப்பம்' என்ற பெயரில் சினிமாவாகிறது.
இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி, பிரபுமாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அந்தோணி தாசன், ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளனர்.
ஜி.ராஜாஜி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊரார் வரைந்த ஓவியம்" என்கிற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம். புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்” என்றார்.