2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஜெமினி. பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் தயாரித்து வெளியாகி திரையரங்குகளில் வசூலை வாரி குவித்தது. இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. குறிப்பாக 'ஓ போடு' பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் நேற்று ஜெமினி படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாலை நேரத்தில் நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஓ போடு பாடலின் இசை பின்னணியில் ஜெமினி திரைப்படத்தில் அவர் ஸ்டைல் காட்டும் சிக்னேச்சர் முத்திரையை மீண்டும் செய்து காட்டினார் . இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.