மொட்டைத்தலையுடன் கோலங்கள் ஆனந்தி! என்னாச்சு அவருக்கு? | உங்களால் எனக்கு ஏற்பட்ட ரூ.1 கோடி நஷ்டம் : பிரகாஷ்ராஜை விளாசிய தயாரிப்பாளர் | உலக சாதனை புத்தகத்தில் நடிகர் அஜித்தின் நிறுவனம் | ‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான் | நவராத்திரி : துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பிரதிபலித்த ஏக்தா ஜெயின் | வெப் சீரியல் இயக்கும் நடிகை ரேவதி! | ஜசரி கணேஷ் பிறந்தநாள் பார்டியில் தனுஷ் : அடுத்த படம் இவருக்குதான் | விஜய்யின் அரசியல் வருகை - நடிகர் கார்த்திக் சொன்ன கருத்து! | ஒரு படம் பிளாப் ஆனால் நடிகை தான் காரணமா? - மாளவிகா மோகனன் ஆதங்கம் | கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ் |
பெப்சி என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைகிறது.
இதனால் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 23ம்தேதி சென்னை வடபழனியில் உள்ள சங்கத்தின் அலுவலத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் தவிர துணைத் தலைவர்கள் பதவிக்கு சபரிகிரிசன், தினா, மோகன மகேந்திரன், தவசிராஜ், மாரி ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பொறுப்புக்கு ராமலிங்கம், புருஷோத்தமன், சாஜிதா, ராஜ ரத்னம், ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் பெப்சி அமைப்பில் இணைந்திருக்கும் 24 சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.