பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! |
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான வெற்றிப்படம் ‛வார்'. அவருடன் டைகர் ஷெரப்பும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதிரடி ஆக் ஷன் படமாக வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் வேறு படத்தில் நடிக்க பிரபாஸ் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார். அதனால் பிரபாஸிற்கு பதில் இப்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கிறது. அவருக்கு கணிசமான சம்பளமும் பேசி வருவதால் நிச்சயம் ஒப்புக் கொள்வார். விரைவில் அறிவிப்பு வரும் என்கின்றனர்.