குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நாக சைதன்யா. இவருக்கு விவாகரத்து ஆன பிறகு இவரை குறித்த பல கிசுகிசு தகவல்கள் வெளியானது. நடிகை தக்ஷா நகர்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ராவணசூரா'. இப்படத்தின் நேர்காணலில், 2022 இல் பாங்க ராஜூ படத்தில் நாக சைதன்யாவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசினார் தக்ஷா நகர்கர். அதில் " பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இனிமையான மற்றும் எளிமையான மனிதர் நாக சைதன்யா "என்று பாராட்டினார். மேலும், நாக சைதன்யா ஒரு காட்சியில் முத்தமிடவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ நேரும்போதெல்லாம் மன்னிப்பு கேட்பார், அது அவரது மரியாதைக்குரிய தன்மை அது" என புகழாரம் சூட்டினார். இப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.