தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். அவருக்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் தற்போது இந்தியா முழுக்க சென்று சாகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சமந்தாவை போட்டோ எடுப்பதற்கு போட்டோகிராபர்கள் சூழ்ந்துள்ளார்கள். அதோடு அந்த போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு எடுத்ததால் டென்ஷனான சமந்தா தனது கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.