தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் விடுதலை. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன் உள்பட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக இப்படத்தில் சேத்தன் நடித்துள்ள ஓசி என்ற கொடூரமான போலீஸ் அதிகாரி வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்திருக்கிறது.
இந்நிலையில் சேத்தன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛விடுதலை படத்தை பார்த்த எனது மனைவியான நடிகை தேவதர்ஷினி மற்றும் மகள் ஆகியோர் கோபத்தில் என்னை தியேட்டரிலேயே அடித்தனர். நான் நடித்துள்ள ஓசி கதாபாத்திரம் ரொம்ப அருவருப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதோடு இந்த படத்தை பார்த்த அவரது தோழிகள் இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் எப்படி நீ வாழ்கிறாய் என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறினார். ஆனால் நான் அவர் சொன்னதை நினைத்து பீல் பண்ணவில்லை. அந்த அளவுக்கு இந்த கேரக்டர் அவர்களை பேச வைத்திருக்கிறது என்று கூறியுள்ள சேத்தன், என்னுடைய நடிப்புக்கு இப்படிப்பட்ட விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து வரவுள்ள விடுதலை- 2 படத்திலும் நான் நடித்துள்ள ஓசி கேரக்டர் இன்னும் பெரிய அளவில் பேசப்படும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.