பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
ராக்கெட்டரி - தி நம்பி எபெக்ட்ஸ் என்ற படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை இயக்கி, நடித்து வெற்றி கண்டவர் மாதவன். தற்போது மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார்.
தமிழகத்தில் பிறந்த ‛இந்தியாவின் எடிசன்' என அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி இந்தப்படம் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அனேகமாக மாதவனே இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி இயக்கவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.