ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் விஜய் நடித்த 'புலி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு சுதீப், இன்று பா.ஜ.,வில் இணையப் போவதாக கர்நாடகா அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பு நிலவியது. கர்நாடகாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மதியம் கர்நாடக முதல்வர் பசவராஜ் முன்னிலையில் சுதீப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களை நான் ஆதரிக்கிறேன். அவர் எனக்கு மாமா போன்றவர். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்கு பல முறை உதவி செய்துள்ளார். அதற்கு எனது நன்றியுணர்வுதான் இது. அவருக்காக நான் இன்று வந்துள்ளேன், ஆனால் கட்சிக்காக அல்ல. நான் அரசியலில் நுழையவில்லை, தேர்தலில் போட்டியிடவில்லை,” என்றார்.
சுதீப்பிற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததாக நேற்று செய்திகள் வெளிவந்தன. அது பற்றி சுதீப் பேசுகையில், “எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது உண்மைதான், அதை யார் அனுப்பியிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். திரையுலகத்திலிருந்துதான் ஒருவர் அதை அனுப்பியிருக்கிறார். அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன். எனது கடினமான சூழ்நிலையில் யார் என்னுடன் நின்றார்களோ, அவர்களுக்கு ஆதரவாக நான் செயல்படுவேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.