லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் |

இயக்குனர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஜெமினி' படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரண். இதனை அடுத்து அஜித் நடித்த 'வில்லன்', விஜய் நடித்த 'திருமலை', கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்' , வின்னர், நியூ, உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் ஒரு பாடலுக்கு ஆடினார். பல சிறு பட்ஜெட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார்.
அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகிய கிரண் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்தார். கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். தனது கவர்ச்சி படங்களை பார்க்க தனியாக தளம் ஒன்றையும் உருவாக்கி கட்டணமும் வசூலித்து வந்தார்.
இந்த நிலையில் கிரண் திடீரென ஆன்மிக பாதைக்கு திரும்பி உள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற கிரண். அந்த படங்களை வெளியிட்டு தான் ஆன்மிக பாதைக்கு திரும்பி விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்தையும், ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.